8677 நெருங்கின பொருள் கைப்படவேண்டும்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.14-1, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

vi, 130 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52086-8-0.

கயல்விழி, திருமங்கை ஆகிய இரு இளம்பெண்களைக் கதையின் பிரதான பாத்திரங்களாக்கி, அவர்களுடாக இளைஞர் சமுதாயத்துக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி நல்ல எதிர்காலத்தை நோக்கி நடைபயில உந்துதல் வழங்கும் வகையில் இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியின் அவசியத்தைக்கூறி, பெண்களின் பங்களிப்பு நாட்டுக்கு முக்கியம் என்கிறார் ஆசிரியர். மேலும் கதையின் போக்கில் வேலையற்ற பட்டதாரிகள் இலங்கையின் பொருளாதாரத்தில் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும், ஒற்றுமையின் பயனையும், பகிடிவதையின் சமூகச் சீரழிவையும் நுழைத்து சிந்திக்கத் தூண்டுகின்றார். கிழக்கின் கட்டைபறிச்சான் கிராமம் இவரது கதையின் களமாகின்றது.

ஏனைய பதிவுகள்