8778 ஆடும் குதிரை: உலகச் செவ்விலக்கியச் சிறுகதைகள்.

என்.கே.மகாலிங்கம். சென்னை 600005: நற்றிணை பதிப்பகம், எண்: 123V/243V, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600 005: கணபதி புரோசஸ்).

192 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ.

ஈழத்து எழுத்தாளரான என்.கே.மகாலிங்கம் தற்போது கனடாவில் வசிக்கின்றார். சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றை தமிழுக்குக் கொண்டுவந்தவர் இவர். இத்தொகுப்பில் உலகக் கவனயீர்ப்பைப்பெற்ற ஏழு சிறுகதைகளை இவர் வழங்கியுள்ளார். இறுதிக் கண்டம் (ஜும்பா லாஹிரி), நடன மாதர் (மார்கரெட் அட்வுட்), ஆடும் குதிரை (டி.எச்.லாரன்ஸ்), அவர்கள் சுமந்து சென்ற பொருட்கள் (டிம் ஓ பிரையன்), கேவலமான ஒரு மனிதக் கனவு (தஸ்தாயெவ்ஸ்கி), பாலத்தடியில் ஒரு கிழவர் (எர்னஸ்ட் ஹெமிங்வே), சுவர் (ழான் போல் சார்த்தர்) ஆகிய ஏழு கதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

14964 இக்கால ஐரோப்பாவின் மலர்ச்சி (1453-1939).

சேர். ஜே.ஏ.ஆர். மரியற்று (ஆங்கில மூலம்), க.கிருட்டினபிள்ளை (தமிழாக்கம்). கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், 1வது பதிப்பு, 1962. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). x, 496 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14