மனோன்மணி சண்முகதாஸ். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 14: ஸ்டார்லைன் பிரின்டர்ஸ், 213, கிரான்ட்பாஸ் வீதி).
xviii, 164 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 125.00, அளவு: 21.5×14 சமீ.
ஜப்பானின் தொடக்க கால இலக்கியம் மன்யோசு என்பதாகும். ஆயிரக்கணக்கான பாடல்களின் தொகை என்பதை ஜப்பானிய மொழியில் மன்யோசு எனக் குறிப்பிடுவர். மன்யோசு தொகை 12 பகுதிகளை உள்ளடக்கியது. கி.பி. 4 முதல் 7 வரையிலான காலகட்டங்களில் தொகுக்கப்பெற்ற மன்யோசு கவிதைகள் இயற்கை, காதல், பிரிவு, பருவ காலங்கள், வாழ்க்கை நுகர்ச்சிகள் முதலிய பொருண்மைகளைக் கொண்டமைந்தன. இத்தகைய சிறப்புமிக்க மன்யோசு தொகுப்பில் உள்ள காதல் பாடல்களின் பின்புலக்காட்சிகளை இந்நூல் 30 இலக்கியக்கட்டுரைகளின் வழியாக தமிழ் மூலம் வழங்க முனைகின்றது.