8811 அலைகள்; அறுபது: அறுபது ஆண்டுகள் அனுபவப் பகிர்வுகள்.

வ.சிவராசா. ஜேர்மனி: தமிழ் எழுத்தாளர் சங்கம், Am Windhovel – 18a, 47249 Duisburg, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

160 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

ஜேர்மனியில் டுயிஸ்பேர்க் நகரிலிருந்து வெளிவரும் மண் சஞ்சிகை- இதில் இடம்பெறும் கட்டுரைகளுக்காகவன்றி, அச்சஞ்சிகையின் தாயகம் சார்ந்த சமூகப்பணிகளுக்காகப் பரவலாக அறியப்பெற்றது. அச்சஞ்சிகையின் ஆசிரியராக அறியப்பெற்றவர் வ.சிவராஜா. பின்னாளில் ஜேர்மனியில் இயங்கிய இரு பிரதான தமிழ் எழுத்தாளர் சங்கங்களில் ஒரு சங்கத்தின் தலைவராகப் பத்தாண்டுகளாகப் பணியாற்றி வருகின்றார். மண் சிவராஜாவின் அறுபதாண்டு நிறைவில் தனது மலரும் நினைவுகளைப் பதிவுசெய்யும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்