8854 ஆசிரியத்துள் நான்: நான்கு தசாப்தங்கள்.

இராஜேஸ்வரி கொன்ஸ்ரன்ரைன். யாழ்ப்பாணம்: Neo Cultural Council, 28/1, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012, (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், பிரதான வீதி).

92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 20.5×14.5 சமீ.

திருமதி இராஜேஸ்வரி கொன்ஸ்ரன்ரைன் அவர்கள் தனது நாற்பதாண்டு ஆசிரியப் பணியினைப் பதிவுசெய்யும் நோக்கில் எழுதியுள்ள நூல். ஏற்கெனவே ஆசிரியத்துள் நான் என்ற தலைப்பில் தனது முப்பதாண்டுப் பணியை நினைவுகூர்ந்து இவர் 2003இல் எழுதிய நூலின் நீட்சியாக இது அமைகின்றது. The Mass Exodus என்ற இவரது கட்டுரை விசேடமாக இணைக்கப்பட்டுள்ளது. 1995 அக்டோபர் 30இல் வடபுலத்தில் இடம்பெற்ற மாபெரும் இடப்பெயர்வின்போது இடம்பெயராமல் தங்கியிருந்த சில குடும்பங்களில் ஆசிரியரின் குடும்பமும் அடங்கும். அந்தக்காலகட்ட அனுபவங்களை இச்சிறப்புக்கட்டுரை  பதிவு செய்கின்றது.

ஏனைய பதிவுகள்