எஸ்.சிவலிங்கராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 183 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-329-7.
குமாரசுவாமிப்புலவர் ஈழத்துத் தமிழ்ப் புலமையின் அடையாளங்களில் ஒருவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்கள் வரை வாழ்ந்த இவர், ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கு மேலாகத் தமது ஆற்றலையும் ஆளுமையையும் தமிழியலிலே ஆழமாகப் பதித்தவர். ஈழத்துத் தமிழிலக்கியப் பரப்பில் முக்கியமானவராகத் திகழ்ந்த ஆறுமுகநாவலரின் அடிச்சுவட்டில் தமது பணிகளை நெறிப்படுத்தியவர். தமிழ் இலக்கணம், இலக்கிய உரைகள், கண்டனம், உரைநடை, செய்யுள், பதிப்பு, அகராதி, புராண படனம், கற்பித்தல் முதலிய பல்வேறு துறைகளிலும் தமது பங்களிப்பினை ஆற்றியவர். இந்நூல் இத்தகைய பெரும் ஆளுமையின் வாழ்வையும் பணிகளையும் ஆராய்கின்றது. சிதம்பரப்பிள்ளை சிவலிங்கராஜா (1945) தனது இளமாணி, முதுமாணி, கலாநிதிப் பட்டங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகின்றார்.