க.குமரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இணை வெளியீடு: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, கொழும்பு 6, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-955-659-400-3.
காலமாற்றங்களும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் என்ற அறிமுகக் கட்டுரையை பேராசிரியர் சபா ஜெயராசா எழுதியுள்ளார். அவரைத் தொடர்ந்து ஈழத்தின் சமகால முற்போக்குப் படைப்பாளிகளாக இனம்காணப்பட்ட பிரேம்ஜி ஞானசுந்தரம் (லெனின் மதிவானன்), டொமினிக் ஜீவா (மேமன்கவி), செ.கணேசலிங்கன் (வசந்தி தயாபரன்), என்.கே.ரகுநாதன் (ந.இரவீந்திரன்), நீர்வை பொன்னையன் (எம்.கே.முருகானந்தன்), காவலூர் ராஜதுரை (எம்.எஸ்.தேவகௌரி), முகம்மது சமீம் (சபா.ஜெயராசா), ஏ.இக்பால் (திக்குவல்லை கமால்), எம்.ஏ.நுஹ்மான் (செ.யோகராசா) பற்றி எழுதப்பட்ட ஒன்பது விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கட்டுரையாசிரியர்களின் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் பதிவுக்காகத் தரப்பட்டுள்ளன.