8898 இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும்  இலங்கையின் இன மோதலும்.

தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன்;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 174  பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-343-3.

உலக நாடுகளின் கவன ஈர்ப்புக்குள்ளான நாடாக இலங்கை மாறியுள்ளது. கடல்வழித் தொடர்பாடலில் எதிர்காலத்தில் இலங்கை காத்திரமான வகிபாகத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. இவ்வகிபாகத்தைத் தமதாக்கிக்கொள்ள முனையும் ஐக்கிய அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்துவதனூடாகத் தமது செல்வாக்குக்கு இலங்கையை உட்படுத்திக்கொள்ள முயல்கின்றன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கிருக்கும் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு சீனா இலங்கையில் அதிக முதலீடுகளைச் செய்துவருகின்றது. இதே அக்கறையுடன் ஏனைய உலக நாடுகளும் இலங்கையைத் தமது தந்திரோபாயப் பங்காளியாக மாற்ற முயற்சிக்கின்றன. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தந்திரோபாயப் பங்காளிகளாக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்ட நிலையில் சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது  சுதந்திர நடவடிக்கைகளுக்கு இலங்கையின் தமிழ் இனப்போராட்டம்  தடையாக இருந்ததனால் அந்த ஈழவிடுதலைப் போராட்டத்தைத் தமது நலன்சார்ந்து இலங்கைக்கு உதவியவகையில் முடித்துவைத்துள்ளன. இச்சூழ்நிலையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண அதிகாரப் போட்டியும் இலங்கையின் இனமோதலும் என்ற இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் புதிய வகிபாகம், இலங்கையில் இந்தியாவின் நேரடித் தலையீடு, இலங்கையுடனான இந்தியாவின் தந்திரோபாய உறவு, சர்வதேச நாடுகளின் தந்திரோபாயச் செயற்பாடுகள், யுத்தத்தின் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் சர்வதேசச் சவால்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோணப் பாதுகாப்பு உறவு ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் மட்டக்களப்பில் செங்கலடி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் முதுநிலை விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

Hart Rubies gebührenfrei zum besten geben

Geräuschvoll Auszahltabelle braucht es drei gleiche Symbole nach der Linie unter anderem unter mehreren der zehn Linien, damit Gewinnkombinationen auszulösen. champagne Spielautomat Konzentriert spielt unser