8906 ஈழம் மக்களின் கனவு.

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600 078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர்; 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).

120 பக்கம், விலை: இந்திய ரூபா 75., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80369-17-4.

ஈழத்தின் கிளிநொச்சி-இரத்தினபுரத்தைச் சேர்ந்த தீபச்செல்வன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பட்டம்பெற்றவர். சிறந்த கட்டுரையாளர், கவிஞர், ஊடகவியலாளர் என்று கருதப்படும் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவியல்துறையில் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இவரது பதினொரு கட்டுரைகளைக்கொண்டுள்ள இந்நூலில் ஈழத்து மக்களும் அவர்களது கனவகளுமே எனது ஆதர்சம் என்ற தலைப்பில் புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளி ஷோபாசக்தியுடனான நேர்காணல் முதலில் இடம்பெறுகின்றது. அடுத்து கௌதம சித்தார்த்தனுக்கு கவிஞர் தீபச்செல்வன் வழங்கிய நேர்காணல் பதுங்குகழியிலிருந்து கொஞ்சம் சொற்கள் என்ற தலைப்பில் இடம்பெறுகின்றது. தொடர்ந்து கிளிநொச்சியின் கதை, வதைவெளி, நிலத்திற்காய் அழும் சனங்கள், நிலம் வென்ற சனங்களின் கதை, அபாயத்துக்கு உள்ளாகியிருக்கும் வன்னிக் கோயில்களும் தமிழர் நிலமும், ஒரு நகரத்தின் பேரழிவு, கனவு உறங்கும் நினைவிடங்களை சிதைக்கும் சிங்கள இராணுவம், இடர்நிலத்தில் இன்னும் ஏன் இப்படித் துயரம், சிங்களவரின் அட்டகாசத்தில் யாழ் நிலம் பாழாகின்றது ஆகிய தலைப்புகளின்கீழ் இவர் எழுதிய கட்டுரைகள் பதிவாகியுள்ளன.

ஏனைய பதிவுகள்

Cellular Slot machine Real money

Articles Better No Wagering Slots Welcome Bonuses United kingdom Can get #4 Reels Of Luck Application And other Game Exactly what do You need to

16589 தேர்ந்தெடுக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்.

க.வாசுதேவன் (தமிழாக்கம்). சென்னை 600042 : பாலம் பதிப்பகம், 25, அபிராமி அபார்ட்மென்ட்ஸ், மூன்றாவது பிரதான சாலை, தண்டீஸ்வரர் நகர், வேளச்சேரி, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600 005: பாரதி அச்சகம்). 140