கனகசபாபதி சரவணபவன். ஜேர்மனி: Trinco Publishers, 1வது பதிப்பு, ஜுலை 2010. (சென்னை26: குமரன் பதிப்பகம், 3 மெய்கை விநாயகர் தெரு, வடபழனி).
400 பக்கம், வரைபடம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 21×14 சமீ.
காலனித்துவகால திருக்கோணமலையின் வரலாற்றை விரிவாக விபரிக்கும் நூல். போர்த்துக்கல்லின் எழுச்சியும் காலனித்துவத்தின் தோற்றமும், போர்த்துக்கீசர் ஆட்சியில் திருகோணமலை, ஒல்லாந்து நிர்வாகம், ஒல்லாந்து ஆளுநர் வான் சாண்டனின் (Van Senden) திருக்கோணமலைப் பயணக் குறிப்பு, பிரெஞ்சுப் படைகளின் வருகையும் வீழ்ச்சியும், பிரித்தானிய-ஒல்லாந்து ஆதிக்கப்போர், பிரித்தானிய ஆதிக்கமும் நிர்வாகமும், திருகோணமலை மீதான யப்பானின் விமானத் தாக்குதல், றோபட் நொக்ஸ்(Robert Knox 1641-1720), கொலொனல் வெலஸ்லி (Colonel Wellesley), அலக்சாண்டர் அலக்சாண்டர் (Alexander Alexander), லியோன் சார்ள்ஸ் Lyon Charles பார்வையில் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 1799-1948 காலகட்டத்துக்குரிய திருகோணமலை மாவட்ட ஆட்சியர் பட்டியல் ஒன்றும் பின்னிணைப்பில் காணப்படுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 227688).