சூரியதீபன். (இயற்பெயர்: பா.செயப்பிரகாசம்). சென்னை 600078: சோழன் படைப்பகம், 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை: அமமன் பிரிண்டிங் வேர்க்ஸ்).
158 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
தமிழகப் படைப்பாளி பா.செயப்பிரகாசம், 2002இல் இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் நடந்தேறிய மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்வு அமைப்பாளர்களின் அழைப்பையேற்று தொல்.திருமாவளவன் அணியினருடன் இலங்கைசென்ற தமிழகக் குழுவில் இடம்பெற்றவர். பின்னாளில் வன்னிப்போரில் தமிழர்களின் படுகொலை நிகழ்வுகளை கூர்ந்து அவதானித்து தமிழகத்தின் எதிர்வினைகளை மதிப்பீடு செய்துவந்தவர். ஈழம் தொடர்பான தமிழகத்தவரின் பார்வைகளையும் நடவடிக்கைகளையும் இந்நூலில் விமர்சனக் கட்டுரைகளாகப் பதிவுசெய்திருக்கிறார். ஈழவிடுதலைப் போராட்டமும் காந்தீயமும், புலி எதிர்ப்பாளர்களின் இன்னும் சில முகங்கள், ஈழம்-ஆன்மா செத்துப்போனவர்கள் யார்?, புலிகள் அல்ல புலி வேடக்காரர்கள், இந்திய மௌனமும் தமிழக எதிர்வினையும், எதிர்ப்பில் முகிழ்க்கும் பண்பாடு, தொடரும் எழுத்துலக மௌனம்: நீங்களே யோசியுங்கள் நீங்கள் எப்படி ஆனீர்களென்று, முத்துக்குமாரைக் கொலைசெய்தோம், பூக்கூடையில் மினுக்கும் கத்தி, காலத்தின் அவசியமா உலகத் தமிழ்மாநாடு? ஆகிய பத்துக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.