அ.மார்க்ஸ். சென்னை 600 005: புலம், 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (சென்னை 600 005: சுப்ரா பிரிண்டெக்).
144 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ.
போருக்குப் பின் ஈழம்: மனச்சாட்சியுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகுவோம் என்ற தலைப்பில் மார்க்சின் விரிவான முன்னுரையுடன் கூடிய இந்நூலில் அவரது ஏழு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவை ஈழத்தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும், தெரியுமா? மலையகத் தமிழர் வஞ்சிக்கப்பட்ட வரலாறு, புலிகளுக்குப் பிறகு, வேலுப்பிள்ளை பிரபாகரன் (1954-2009), ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும், புலிகளைச் சற்றே மறந்தவிட்டு தமிழர்களின் பிரச்சினையைப் பேசுவோம், ஈழப்பிரச்சினை பாராளுமன்றத் தேர்தலைப் பாதிக்கப்போவதில்லை ஆகிய தலைப்புகளில் இவை முன்னர் ஊடகங்களில் பிரசுரமானவை. நூலின் பின்னிணைப்புகளாக சிராஜுதீன் எழுதிய புலிகளின் முகவர் என ஏன் உங்களைச் சொல்கிறோம் என்ற கட்டுரையும், போரை நிறுத்து: கண்டனக் கூட்ட அறிக்கை,பன்னாட்டுக் கண்டன ஆர்ப்பாட்ட அறிக்கை, இலங்கையில் அடுத்தது என்ன:அரசியல் தீர்வை நோக்கி அறிக்கை ஆகிய மேலும் மூன்று ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன.