ஜெகத் கஸ்பார். சென்னை 600014: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, 1வது பதிப்பு, 2009. (சென்னை 600014: சாருபிரபா பிரின்டர்ஸ்).
176 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-81-906346-7-0.
வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளரான அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் தமிழகத்தில், நக்கீரன் பத்திரிகையில் எழுதிய ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான கட்டுரைத் தொடரொன்று மறக்க முடியுமா என்ற தலைப்பில் நீண்டகாலம் வெளிவந்தது. இத் தொடரின் முதல் 56 அத்தியாயங்கள் இரு நூல்களாக வீரம் விளையும் ஈழம், பேசுகிறார் பிரபாகரன் ஆகிய தலைப்புகளில் வெளியிடப்பட்டன. முன்னைய தொடரில் 30 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. எஞ்சிய 27 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.