எஸ்.மகாதேவன் (மலையாள மூலம்), குளச்சல் மு. யூசுஃப் (மொழிபெயர்ப்பு). தமிழ்நாடு: எதிர் வெளியீடு, 305 காவல் நிலையம் சாலை, பொள்ளாச்சி 642001, 1வது பதிப்பு, ஜுலை 2009. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).
79 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ., ISBN: 9789380211084.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் இந்நூல் வெளியிடப்பட்டது. இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாகக் கடல்மார்க்கமாக வந்தவண்ணமுள்ளனர். அப்படி வருபவர்களில் கணிசமானோர் இந்தியக்கரையை அடைவதில்லை என்ற அனுமானத்தில், அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற தேடலாக உருவகித்த கற்பனையில் உதித்த கதை இது. ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய ஆழமான பார்வையற்ற கற்பனாவாதக் கதையாக இது அமைகின்றது.