12703 – கட்டியம்: உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ். தொகுதி 1-எண்1: ஏப்ரல்-ஜுன ; 2002.

அன்ரன் பொன்ராஜா (நிர்வாக ஆசிரியர்), வீ.அரசு (சிறப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: தமிழ் நாடகக் கல்லூரி, சுவிஸ், இணை வெளியீடு, தமிழ்நாடு: விறல் அறக்கட்டளை, 1வது பதிப்பு, ஜுன் 2002. (சென்னை 14: வே.கருணாநிதி, பார்க்கர் கம்பியூட்டர்ஸ்).

166 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 18 சமீ.

கட்டியம் உலகத் தமிழர் அரங்கியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் இலங்கையிலிருந்து கா.சிவத்தம்பிஇ சி.மௌனகுருஇ குழந்தை ம.சண்முகலிங்கம் ஆகியோரும், தமிழகத்திலிருந்து ந.முத்துசாமி, கவிஞர் இன்குலாப், ஓவியர் ட்ராஸ்கி மருது ஆகியோரும், புகலிடத்திலிருந்து ஏ.சி.தாசீசியஸ், இளைய பத்மநாதன், மக்கின்ரையர் ஆகியோரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் தலையங்கம் (தமிழர் அலைவும் தமிழ் அரங்கும்), ஆய்வுக் கட்டுரைகள் (கூத்தும் நடனமும்/ கா.சிவத்தம்பி, மரபுகளின் தொடர்ச்சி: கம்பெனி நாடகமும் தமிழ் சினிமாவும்/சு.தியடோர் பாஸ்கரன், வேத்தியல் பொதுவியல் என்று இரு திறம்/இளைய
பத்மநாதன், பின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப் புரிந்து கொள்ளல் ஓர் ஆரம்ப முயற்சி/சி.மௌனகுரு), உரையாடல் (எழுதப்பட்ட அரங்கப் பிரதிக்கு இணையான ஒளி அமைப்புப் பிரதி/செ.ரவீந்திரன்), நாடக விமர்சனம் (மெடியாவும் மணிமேகலையும்/எஸ்.வி.ராஜதுரை, சுவிஸில் எழுந்தகடலம்மா அலை/கல்லாறு சதீஷ், இராவணேசன்-கூத்தின் இன்றைய வடிவம் சி.சந்திரசேகரம்), நூல் விமர்சனமும் அறிமுகமும் (பெண்-அரங்கம்-தமிழ்ச் சூழல்/இன்குலாப், ஈழத்தின் மரபவழி அரங்கம் குறித்த இரு நூல்கள்/தெ.மதுசூதனன்), ஆவணம் (தெருக்கூத்துப் பிரதியில் இசைக்கூறுகள்/ப.குணசுந்தரி), நாடகப் பிரதி (கடலம்மா/யோகராஜா), பதிவு (அரங்க ஆற்றுகையாளர் ஒன்றுகூடல்) ஆகிய எட்டு பிரிவுகளில் படைப்பாக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30936).

ஏனைய பதிவுகள்