அன்ரன் பொன்ராஜா (நிர்வாக ஆசிரியர்), வீ.அரசு (சிறப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: தமிழ் நாடகக் கல்லூரி, சுவிஸ், இணை வெளியீடு, தமிழ்நாடு: விறல் அறக்கட்டளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (சென்னை: கணேசமூர்த்தி, ஜோதி என்டர்பிரைசஸ்).
159 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.
கட்டியம் உலகத் தமிழர் அரங்கியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் இலங்கையிலிருந்து கா.சிவத்தம்பி, சி.மௌனகுரு, குழந்தை ம.சண்முகலிங்கம் ஆகியோரும், தமிழகத்திலிருந்து ந.முத்துசாமி, கவிஞர் இன்குலாப், ஓவியர்ட்ராஸ்கி மருது ஆகியோரும், புகலிடத்திலிருந்து ஏ.சி.தாசீசியஸ், இளையபத்மநாதன், மக்கின் ரையர் ஆகியோரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவ்விதழில் தலையங்கம் (கண்ணப்பத் தம்பிரான்), அஞ்சலி (வீராசாமித்தம்பிரானின் புரிசை தெருக்கூத்துப் பரம்பரைஃ த.முத்துசாமி, மரபை மீறியகலைஞனின் முடிவிலாத் தேடல்ஃசெ.இரவீந்திரன்), ஆய்வுக் கட்டுரைகள்(கூத்து ஒரு அறிமுகம்ஃஇளைய பத்மநாதன், விடுதலைக்கான அரங்கின் தேவைஃஎஸ்.பாலசிங்கம், பார்சி அரங்கு: தோற்றமும் வளர்ச்சியும்-1/சோம்நாத் குப்தா), உரையாடல் (மண்ணும் மரபும் மூச்சாக/ஏ.சீ.தாசீசியஸ், தெருவெளி அரங்கம் நோக்கி/பாலசிங்கம்), நாடக விமர்சனம் (நாடகவெளி: பிரதியை நோக்கித் திரும்புதல்/வளர்மதி, காத்தவன் கூத்து-ஓர் அநுபவம்/பராசக்தி சுந்தரலிங்கம்), குறுந்தகடு அறிமுகம் (அல்ப்ஸ் கூத்தர்கள்/அம்ஷன் குமார்), நூல் விமர்சனமும் அறிமுகமும் (ஈழத்து தமிழ் நாடக அரங்கியல்துறையில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை/கா.சிவத்தம்பி), ஆவணம் (வீராசாமித் தம்பிரான் வாழ்ந்தவரலாறு), நாடகப் பிரதி (ஆத்ம தகனம்/செ.இளங்கோ), பதிவு (ஈழத்து நாடகக் கலைச் சூழலில் அக்கினிப் பெருமூச்சு ஒரு பார்வை/சு.வில்வரத்தினம், தமிழ்
அவைக்காற்றுக் கழகத்தின் நாடக விழா 2003/ஏ.ஜே.கனகரத்தினா) ஆகிய பத்துப் பிரிவுகளில் இவ்வாய்விதழின் படைப்பாக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31459).