12721 – தமிழ் கலைவிழா 1994: சிறப்பு மலர்.

ஏ.எம்.நஹியா (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார, சமய அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

(14), 98 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5 x 19 சமீ.

முன்னர் தமிழ் சாகித்திய விழா என அழைக்கப்பட்ட தமிழ் கலைவிழா, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த விழாவாகும். 1991இல் கண்டியில் நடந்த இவ்விழா 1992 முதல் கொழும்பில் நடத்தப்பட்டது. 1994இல் நடத்தப்பட்ட விழா கொழும்பு இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் நடந்தேறியது. இவ்விழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. இலங்கையின் அரங்கியல்துறை தொடர்பான சிறப்புக் கட்டுரைகளைக் கொண்ட இம்மலரில், தமிழ் நாடக வளர்ச்சி (ஏ.என்.பெருமாள்), எழுதப்படாத வரலாறுகள்: தமிழ் நாடக வரலாறு பற்றிய சில சிந்தனைகள் (கே.ஏ.குணசேகரன்), சமகாலத் தமிழ் நாடகம் (ஜே.ரெங்கராஜன்), பாடசாலை நாடகங்கள் -சில அவதானிப்புகள் (குமாரசாமி சோமசந்தரம்), தொடர்புக் காத்திரமும் கலை ஆழமும் கொண்ட நாடக அரங்க முறைமை (அ.இரவி), தமிழ் நாடகத்துறையை வர்த்தக அடிப்படையில் கட்டிஎழுப்புவது எவ்வாறு?(காவலூர் இராசதுரை), சைவப் புலவரின் கிறீத்தவக்
கூத்து (நீ.மரியசேவியர்), நவீன சிங்கள அரங்கும் பேராசிரியர் சரச்சந்திரவின் இரு நாடகங்களும் (எம்எஸ்.எம்.அனஸ்), இலங்கை வானொலித் தமிழ் நாடகங்கள்: ஓர் உள்நோக்கு (ஜோர்ஜ் சந்திரசேகரன்), இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் (கமலினி செல்வராசன்), இலங்கையில் தமிழ் நாடகப் பயில்வு-ஒரு விவரணப் பதிவு (கா.சிவத்தம்பி), யாழ்ப்பாண மரபுவழி நாடகங்கள் (காரை. செ.சுந்தரம்பிள்ளை), வன்னிப் பிரதேச அரங்கியல் மரபு (மெற்றாஸ் மயில்), திருக்கோணமலைப் பிரதேச நாடக அரங்கப் பாரம்பரியம் (கா.சிவபாலன்), மலையக அரங்கியல்-ஒரு நோக்கு (மாத்தளை கார்த்திகேசு), மலையக நாடகங்களில் கட்டியக்காரன், கோமளி, பபூன் (மாத்தனை பெ.வடிவேலன்), கொழும்புப் பிரதேச அரங்கியல் பாரம்பரியம் (எம்.எச்.எம்.பௌசுல் அமீர்) ஆகிய 17 அரங்கியல்சார் கட்டுரைகள் இம்மலரை அலங்கரித்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14182).

ஏனைய பதிவுகள்

12686 – நிறந் தீட்டுவோம்: உடல் உளவிருத்திக்கான துணைநூல்.

வி.என்.எஸ்.உதயசந்திரன். யாழ்ப்பாணம்: உமா வெளியீட்டகம், 43, பொன்னம்பலம் வீதி, அரியாலை, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (சென்னை 5: பக்கம் மறுதோன்றி (Pயபந ழுககளநவ), 6ஃ2, தேவராசன் தெரு). (8), 9-64 பக்கம், சித்திரங்கள்,

Zentralgestirn Spielbank Erfahrungen

Content Alternativen Zum 10 Maklercourtage In Eintragung Gold Riviera Kasino 2500 Ecu Startguthaben Gratis Sie ausfindig machen den Prämie entweder unter ihr offiziellen Inter auftritt