12729 – எழுதுவோம் வாசிப்போம்: 6-11 தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான மாதிரிக் கட்டுரைகள்.


ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).


vi, 122 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN:978-955-1997-57-1.


ஆறு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கேற்ற 35 சிறிய கட்டுரைகளை கேணிப்பித்தன் எழுதித் தொகுத்து வெளியிட்டுள்ளார். இடையிடையே புகைப்படங்களும் செருகப்பட்டுள்ளன. கட்டுரை எழுதும் முறை, என்னைப் பற்றி நான், எங்கள் வீடு, எனது நகரம், எனது நாடு, எனது நாய்க்குட்டி, எங்கள் வீட்டு வெள்ளைப் பசு, நான் விரும்பி வளர்க்கும் பறவை, குயிலாக நானிருந்தால், எனது பூந்தோட்டம், வீட்டுத் தோட்டம் வளர்ப்போம், நாம் வாழும் சூழல், விண்வெளிஆய்வு, சூரியன், பூமியின் சந்திரன், விண்வெளியில் வலம்வந்த முதற் பெண் வலண்டினா, மதங்க சூளாமணி ஒரு நாடகத் தமிழ் நூல், தமிழ் மொழி, நான் விரும்பும் நூல்-யாழ் நூல், நான் விரும்பும் பெரியார், கதைப் புத்தகங்களை வாசிப்போம், நாட்டார் பாடல்கள், ஊடகங்களின் பயன்பாடு, பழமொழிகளின் பயன்பாடு, கல்பனா சௌலா, இலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கரா, உயிர்காக்கும் இடி தாங்கி, சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம். வெகுசனத் தொடர்பு சாதனங்கள், தொலைக்காட்சியும் விளைவுகளும், வாசிப்பு மனிதனை உயர்த்தும், தமிழறிஞர் பேராசிரியர் சிவத்தம்பி, குறள் கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள், நல்ல நுல்களே நல்ல நண்பர்கள், அன்னைதிரேசா ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

17077 அபிவிருத்திக்கான இணைந்த செயற்பாடு: ஊடக அமைப்புகளினதும் சிவில் சமூகத்தினதும் பங்களிப்பு (ஊடக வளத் தொகுதி).

டில்ருக்ஷி ஹென்டுநெட்டி (ஆங்கில மூலம்), இராஜநாயகம் பாரதி (தமிழாக்கம்). கொழும்பு 7: சீடா நிறுவனம், (Canadian International Development Agency), பனோஸ் தெற்காசியா, 29, கிரஹரி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2010. (அச்சக