திருமதி வ.நடராஜா. யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 10, மெயின் வீதி, பதிப்பு விபரம்
தரப்படவில்லை. (கண்டி: Fine Graphics).
v, 90 பக்கம், தகடுகள், விலை: ரூபா 80., அளவு: 20 x 14 சமீ.
வரலாற்றுக் கட்டுரைகள், கற்பனைக் கட்டுரைகள், பண்டிகைகள், தற்சார்புக் கட்டுரைகள், விளக்கக் கட்டுரைகள், சுயசரிதைகள், வர்ணனைக் கட்டுரைகள், சிறுகதைகள், ஏனைய கட்டுரைகள், கடிதங்கள் கொடுக்கப்பட்ட வசனங்களைத் தொடர்ந்து எழுதுதல் ஆகிய பதினொரு பிரிவுகளின் கீழ் ஆசிரியரால் எழுதப்பட்ட 80 சிறு கட்டுரைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தரபுலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு இக்கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத்தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32689).