12108 – திருக்கோணமலை விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி (சிவன்) கோவில் மகாகும்பாபிஷேக மலர்.

இ.வடிவேல், அ.கணேசலிங்கம், திருமலை சுந்தா, து. தவசிலிங்கம் (மலர்க் குழுவினர்). திருக்கோணமலை: விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோவில், 1வது பதிப்பு, ஜுன் 1999. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேசா பிரஸ்).

viii, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21.5 சமீ.

ஆசியுரைகள், தல வரலாறு என்பவற்றுடன் ஒரு புதிய விடிதற் பொழுது (சி. சிவசேகரம்), பாணலிங்கம் (சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்), விஸ்வநாத சுவாமி (சிவன்) ஊஞ்சல் (வே.அகிலேசபிள்ளை), இறைவழிபாடு (திருமுருக கிருபானந்த வாரியார்), புலவர் அகிலேசபிள்ளை வரலாறு (இ.வடிவேல்), திருமுறைகள், சிவலிங்க வழிபாடு (சி.பத்மநாதன்), சண்டேஸ்வர நாயனார் வரலாறு, மார்க்கண்டேயர், சிவாலய வழிபாட்டு நெறி, சிவகாமி அம்மன் ஊஞ்சல் (வே.அகிலேசபிள்ளை), திருமுறைகளில் இலக்கிய வளம் (சி.பாலசுப்பிரமணியம்), தாய்மையே இறைவனின் முதல் வடிவம் (தங்கம்மா அப்பாக்குட்டி), விபூதியின் சிறப்பு (திருமுருக கிருபானந்த வாரியார்), பள்ளி எழுந்தருளாயே (மணிமேகலாதேவி கார்த்திகேசு), விஸ்வநாதசிவனுக்கு கலையால் ஆராதித்த முத்தமிழ் வித்தகர் வேலாயுதம்பிள்ளை (த.சித்தி அமரசிங்கம்), ஆத்மீக உள்ளொளி (இ.செல்வராணி), கேதாரகௌரி விரதம் (ஸ்ரீ வித்தியாரஞ்சனி ஸ்ரீரங்கநாதன்), சிவனாலயம் அமைத்த சிற்பாசாரியார் (இ.சி.சுந்தரலிங்கம்), ஓம் நமசிவாய (சுவாமி தந்திரதேவர்), என்றும் இறைஞ்சுகின்றோம் (செ.நவசோதிராசா), தோத்திரப் பாடல் (அப்பாச்சிப்பிள்ளை செல்வநயினார்), குடமுழுக்கு நாயகன் (திருமலை சுந்தா), உயிர்காக்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் (நாகராஜா கணபதிப்பிள்ளை), விஸ்வநாதரை வேண்டிநின்றாள் (த.சிவராஜசிங்கம்), பிரம்மஸ்ரீ பூரண சண்முகரெத்தினக் குருக்கள் (பூரண சுந்தரேஸ்வர சர்மா), சிவனின் திருவிளையாடற் கதைகள் (தி. பிரியந்தி), திருக்கோணமலை விசாலாட்சி சமேத விஸ்வநாதசுவாமி (சிவன்) கோவில் புனருத்தாரணப் பணி (து.தவசிலிங்கம்), நிதியுதவியோர்களின் விபரப்பட்டியல், கோவில் அமைப்பு ஆகிய படைப்பாக்கங்களும் இம்மலரில் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27395).

ஏனைய பதிவுகள்

12639 – இலங்கையில் பழப்பயிர்களைப் பாதிக்கும் பீடைகளும் அவற்றைக் கட்டுப்படுத்தலும்.

G.A.W.விஜேசேகர, ஜயந்தா இளங்கோன் மெனிக்கே (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). பேராதனை: விவசாயஅமைச்சு, விவசாயத் திணைக்களம், 1வது பதிப்பு, 2001. (பெரதெனிய: விவசாய அமைச்சின் அச்சகப் பிரிவு, கன்னொருவை). (6), 72 பக்கம், புகைப்படங்கள்,