கார்த்திகேயன் ஆனந்தசிவம் (இதழாசிரியர்), திருமதி கங்கா முருகன், ச.மனோகரன் (துணை இதழாசிரியர்கள்). நீர்கொழும்பு: இந்து இளைஞர் மன்றம், கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, 2008. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்).
(360) பக்கம், வண்ணத் தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5.5×22
சமீ. ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், வரலாறுகள், கட்டுரைகள், பரிசுபெற்றோர் விபரங்கள், பரிசுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஆகிய பிரிவுகளின்கீழ் இம்மலர் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டுரைப் பகுதியில் வாய்மொழி இலக்கியம் தாலாட்டு பெண்களின் பங்களிப்புகள் (செல்வி திருச்சந்திரன்), சித்தாந்தச் சிந்தனைகள் – கவிதைகள் (கம்பவாரிதி ஜெயராஜ்), தமிழும் சைவமும் தழைப்பதில் புலம்பெயர்வோரின் ஈடுபாடுகள் இடைஞ்சல்கள், வளர்ச்சிகள்: ஒரு கண்ணோட்டம் (மு.ந.சிவச்செல்வன்), ஈழத்தில் முருக வழிபாடு சிறப்புப் பெற்ற தலங்கள் (கனகசபாபதி நாகேஸ்வரன்), இராமாயண இதிகாசம் வெளிப்படுத்தி நிற்கும் இலக்கிய விழுமியங்கள் (பூரணம் ஏனதிநாதன்), இந்துசமய வழிபாட்டில் ஒன்றிவிட்ட பெண்தெய்வ வழிபாடு (ச.பத்மநாதன்), மெய்கண்ட சாத்திரங்களில் திருவருட்பயனின் சிறப்பு (சு.செல்லத்துரை), ஆதித் தமிழர் வாழ்வில் பிறமதச் செல்வாக்கு (க.வி.விக்னேஸ்வரன்), ஆன்ம நேயம்-சில குறிப்புகள் (குமாரசாமி சோமசுந்தரம்), இந்து சமயக் கல்வி மரபு (சோ.சந்திரசேகரன்), கந்தபுராணத்தில் ஒரு துளி (மு.தியாகராசா), சமய குரவரும் சைவசமய நெறிகளும் (சற்சொரூபவதி நாதன்), இலங்கையில் இந்து சமயம் (தேவகுமாரி ஹரன்), தமிழர் கலாசார வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த பண்டிகைகள் (பத்மா சோமகாந்தன்), சைவத்தை வளர்க்கவேண்டியஅவசியம் (ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி), திருநீற்றின் மகிமை (எஸ்.குமாரவேலு), திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறி (ந.கணேசலிங்கம்), திருவாசகத்தின் பெருமை (திருமதி ச.குமாரவேலு), சேக்கிழார் காட்டிய இறை அன்பு (இ.ஆ.க.சொக்கநாதன்), சமய கலாசார விழுமியங்களை வளர்ப்பதில் அறநெறிப் பாடசாலைகளின் பங்களிப்பு (திருமதி ஜெயந்தி நவரட்ணம்), விக்கினங்கள் போக்கும் விநாயகர் பெருமை (திருமதி நித்தியகலா கிருஷ்ணராம்), கந்தபுராணம் கூறும் இறைதத்துவம் (தாமரைலட்சுமி வைத்தியநாதன்), துரியோதனன் தீய மனத்தோன் அல்ல (எஸ்.மனோகரன்), பஞ்ச ஈஸ்வரங்கள்(திருமதி தி.அன்புக்கரசி), எல்லா மதத்தையும் உள்ளடக்கிய இந்து மதம் (கா.ஆனந்தசிவம்), கைகேயி ஒரு மாசற்ற தியாகசீலி (கா.ஆனந்தசிவம்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மலர் வெளியீட்டுக் குழு அங்கத்தவர்களாக பொ.ஜெயராமன், சு.நவரெட்ணராஜா, ந.கணேசலிங்கம், ஆ.கந்தசாமி, ச.நடராஜன், வே.சந்திரசேகரம், திருமதி ஜெயந்தி நவரட்ணம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.