க.ந.வேலன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 10, மெயின் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1964. (யாழ்ப்பாணம்: கலைவாணி பிரின்டிங் வேர்க்ஸ்).
xii, 231 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21 x 13.5 சமீ.
இந்நூல் அரசினரின் ஜீ.சீ.ஈ. வகுப்பு, 1965,-66, -67ஆம் ஆண்டுக்குரிய பாடத் திட்டத்தைத் தழுவி எழுதப்பட்டது. கம்பராமாயண நூற்சிறப்பு, கம்பநாட்டாழ்வார் வரலாறு, அயோத்தியா காண்டம் (கதைச்சுருக்கம்), நூல் மூலமும் உரையும், மந்தரை சூழ்ச்சிப் படலம், கைகேயி சூழ்வினைப் படலம், செய்யுள் முதற் குறிப்ப கராதி ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரித்தெழுதப்பட்டுள்ளது. இந்நூலில் பாடல்களுக்குப் பதவுரையும், தூய நடையில் பொழிப்புரையும், மாணவர்களுக்குப் பயன்படும் முறையில் தெளிவை அளிக்கும் சிறந்த விளக்கமும், செய்யுள் நயம் காணும் முறையும், அருஞ்சொற் பொருளும் நலம்பெற அமைந்துள்ளன. ஒவ்வொரு செய்யுளுக்கும் இலக்கண விளக்கம் விபரமாகத் தரப்பட்டுள்ளது. நூலாசிரியர் வித்துவான் க.ந.வேலன் அவர்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தமிழாசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35738).