12127 – கந்த புராணக் கதைகளும் அவைகளுணர்த்தும் உண்மைநூற் கருத்தும்.

நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர். வட்டுக்கோட்டை: சைவ இனைளஞர் சங்கம், வட்டுக்கோட்டை சைவ ஆங்கில வித்தியாசாலை, 1வது பதிப்பு, 1939. (சங்கானை: சச்சிதானந்த அச்சியந்திரசாலை).

(10), 84 பக்கம், விலை: 50 சதம், அளவு: 17.5×12.5 சமீ.

பாயிரம் (தோற்றுவாய், முப்பொருள் விளக்கம், கதையுணர்த்தும் மெய்ப்பொருட் கொத்து), தக்கன், அசுரர் பிறப்பு, காசிபனுபதேசம், மாயை யுபதேசம், அசுரர் வரம் பெறுதல், சுக்கிரனுபதேசம், தேவர் சிறைப்படுதல், தேவர் புலம்புதல், சிவபெருமான் திருவருள் புரிதல், உமை சிவபெருமானை நீங்குதல், காமதகனம், உமை திருமணம், முருகக் கடவுள் திருவவதாரம், துணைவர் வருதல், திருவிளையாடல், தகரேறுதல், அயனைச் சிறையிடுதல், சிவனுக்குபதேசம், படையெழுச்சி, தாரகன் வதை, சயந்தன் புலம்பல், முருகக் கடவுள் அருள்புரிதல், வீரவாகு தூது, பானுகோபன் வதை, சிங்கன் வதை, சூரன் வதை, தேவர் சிறைமீட்சி, தெய்வயானையம்மை திருமணம், விண்குடியேற்றம், வள்ளியம்மை திருமணம் ஆகிய 30 கதைகளை எளிமையான வடிவில் இந்நூலில் விளக்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2922).

ஏனைய பதிவுகள்