12133 – கொழும்பு ஸ்ரீ ராமகிருஷ்ண ஆச்சிரம பஜனாவளி.

ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன். கொழும்பு 6: ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமம் (இலங்கைக் கிளை), இராமகிருஷ்ணா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1960. (கொழும்பு 11: ஆவ்ரா பிரின்டிங் வேர்க்ஸ், 19, செட்டியார் தெரு).

xii, 109 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×13 சமீ.

வெள்ளவத்தையில் ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரமத்தினர் ஞாயிறு தோறும் நடத்தும் சமயபாட வகுப்புகளில் பயன்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பெற்ற கூட்டுப் பிரார்த்தனைக்குரிய பாடல்கள் அடங்கிய நூல். ஸ்தோத்திரப் பாடல்களும், நாமாவளிகளும் அடங்கியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2965).

ஏனைய பதிவுகள்