சுப.இரத்தினவேல் பாண்டியன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 13: அருள்மிகு வரதராஜ விநாயகர் கோவில், 105, கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, அக்டோபர் 1993. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி, ரகிசா கட்டிடம், 834 அண்ணா சாலை).
188 பக்கம், சித்திரங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
1993 நவராத்திரி விழா 16.10.1993 அன்று கொண்டாடப்பட்டவேளையில் மேற்படி கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராஜ விநாயகர் கோவில் அறங்காவலர்களான த.நீதிராஜா, தெ.ஈஸ்வரன், பொ.பாலசுந்தரம் ஆகியோரினால் அருள்மிகு வரதராஜ விநாயகர் கோவில் சார்பாக வெளியிடப்பட்ட சக்தி வழிபாடு தொடர்பான பக்திப்பாடல் தொகுப்பு நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17229).