12136 – சிவஸஹஸ்ரநாமார்ச்சனை.

ஸ்ரீ முருகேசு ஞானப்பிரகாசம் (மூலம்), சிற்றம்பலம் முருகவேள் (கருத்தும் குறிப்பும்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340,352, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, வைகாசி 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xx, 124 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22.5×15 சமீ.

ஏழாலை மடத்துப்பிள்ளையார் கோயிலடியைச் சேர்ந்த ஸ்ரீ முருகேசு ஞானப் பிரகாசம் சமஸ்கிருத அறிவு மிகுந்தவர். அவர் எழுதியுள்ள இந்நூல் அச்சுவாகனமேறும் முன்னரே நூலாசிரியர் மறைந்துவிட்டதால், அவரது தமையனாரின் மகனான சி.முருகவேள் இந்நூலுக்கான கருத்துரை, குறிப்புரை ஆகியவற்றைச் சேர்த்து அச்சுவாகனமேற்றியுள்ளார். இந்நூல் ஆசியுரை, முன்னுரை, அறிமுகம், ரோமன் லிபி எழுத்துப் பெயர்ப்பு-ஒரு வழிகாட்டல், சிவஸஹஸ்ர நாமார்ச்சனை-மூலபாடம், கருத்தும் குறிப்பும், நூற்பட்டியல் ஆகிய தலைப்புகளின் கீழ் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20566).

ஏனைய பதிவுகள்