12144 – திரு அருட்பா மாலை: வழித் துணைவன்.

கயிலைமணி அருள் சுவாமிநாதன், இந்திரா திருநீலகண்டன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 6: இடைக்காடு இந்து நெறிக் கழகம், இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் ஆலய பரிபாலன சபை, 17டீ,1/3,மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (கொழும்பு 13: வே.திருநீலகண்டன், லட்சுமி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

xiii, 187 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

பாராயணம் செய்வதற்கேற்ற வகையில் 61 வகைப்பட்ட அருட்பாக்கள் திரட்டப் பட்டு பாமாலையாக இந்நூலில் வழங்கப்பட்டுள்ளன. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், 11ஆம் திருமுறை, பெரியபுராணம், திருப்புகழ், வாழ்த்து, மங்களம், விநாயகர் அகவல், விநாயகர் துதி, திருநீற்றுப்பதிகம், கோளறு பதிகம், நமச்சிவாயப் பதிகம், திருமறைக்காட்டுப் பதிகம், திருக்கயிலாயப் பதிகம், திருப்புகலூர்ப் பதிகம், திருப்பாண்டிக்கொடுமுடி, சிவபுராணம், திருவெம்பாவை, திருப்பொற்சுண்ணம், திருப்பள்ளியெழுச்சி, அடைக்கலப்பத்து, அச்சொப்பதிகம், ஸ்ரீதேவி கருமாரி அம்மன் தோத்திரம், துக்கநிவாரண அஷ்டகம், அம்மன்துதி, புராணம், சகலகலாவல்லி மாலை, சரஸ்வதி துதி, இலக்குமி துதி, அபிராமி அந்தாதி, அபிராமியம்மைப் பதிகம், கந்தசஷ்டி கவசம், முருகன்துதி, முருகன் திருப்புராணம், பெருமாள் திருமொழி, பெரிய திருமொழி, திருமால் துதி, பட்டினத்தார் பாடல், வள்ளலார் திருவருட்பா, இலிங்கோற்பவர் துதி, தட்சிணாமூர்த்தி, பைரவர் துதி, வீரபத்திரர் துதி, நந்தியெம்பெருமான் துதி, ஐயப்பன் துதி, ஆஞ்சநேயர் துதி, நவக்கிரக தோத்திரங்கள், நால்வர் துதி, அறுபத்துமூவர் துதி, சேக்கிழார் துதி, சண்டேசுரர் துதி, கொடிக்கவி, கொடியேற்றவிழாத் திருமுறைகள், நவசந்தித் திருமுறைகள், பன்னிரு திருமுறைக் குறிப்புகள் என 61 தலைப்புகளில் இவை தொகுக்கப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38515).

ஏனைய பதிவுகள்

12398 – சிந்தனை: தொகுதி I இதழ் 3 (கார்த்திகை 1983).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, கார்த்திகை 1983. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). (7), 141 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 24.5×17