12149 – திருமுறையும் சைவத்திருநெறியும்:திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம்.

க.இரகுபரன், ஸ்ரீபிரசாந்தன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 392 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-9233-41-1.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒழுங்குசெய்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. பக்தியிலக்கிய மரபில் திருவிசைப்பா (சோ. பத்மநாதன்), முருகக் கடவுள் மீதான திருவிசைப்பா (வ.குணபாலசிங்கம்), திருவிசைப்பா, திருப்பல்லாண்டு வெளிப்படுத்தும் பக்திச் சுவை (கிருஷ்ணவேணி நோபர்ட்), திருப்பல்லாண்டின் இலக்கிய மரபு (சாந்தி கேசவன்), திருமந்திரப் பதிப்புக்கள் (சுகந்தினி சிறீமுரளிதரன்), திருமந்திரம் உபதேசம் (அரங்க. இராமலிங்கம்), திருமந்திரம் கூறும் முத்திக்கோட்பாடு (சி.ரமணராஜா), திருமந்திரம் எடுத்தாளும் சைவப் பிரிவுகள் (நா.ஞானகுமாரன்), திருமந்திரத்தில் வடமொழி செல்வாக்கு (ச.பத்மநாபன்), திருமந்திரத்தில் குருவழிபாடு (சாந்தி நாவுக்கரசன்), அறவியல் நோக்கில் திருமந்திரம் (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), திருமந்திரத்தில் உயிரியல்: அறிவியல் நோக்கு (ச.முகுந்தன்), திருமந்திரத்தில் பக்தி (றூபி வலன்ரீனா பிரான்சிஸ்), திருமந்திரத்தில் மாயை (பொ.சந்திரசேகரம்), திருமந்திரத்தில் ஆணவம் (நா.வாமனன்), திருமந்திரத்தில் சங்கமம் (தி.செல்வமனோகரன்), திருமந்திரத்தில் வாழ்வியல் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), திருமந்திரமும் ஆகமங்களும் (பாலகைலாசநாத சர்மா), திருமந்திரத்திலும் தம்மபதத்திலும் கூறுகின்ற பஞ்சபாவங்கள் மற்றும் பஞ்சசீலம் (தம்மிக்க ஜயசிங்க), மொழியியல் நோக்கில் திருமந்திரம் (சுபதினி ரமேஸ்), திருமந்திரத்தில் பசுக் கோட்பாடு (மா. வேதநாதன்), ஆலய வழிபாடு (விக்னேஸ்வரி பவநேசன்), நவீன சிந்தனைகளின் ஒளியில் திருமந்திரம் (ம.நதிரா), திருமந்திரத்தில் கடவுட் கோட்பாடு (சிவ மகாலிங்கம்), திருமந்திரத்தில் கன்மம் (ந.சுபராஜ்), சைவமரபில் ஒன்பதாம் திருமுறை (ஸ்ரீ பிரசாந்தன்)ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்