12150 – திருவாசக ஆராய்ச்சியுரை: முதலாம் பாகம்.

சு.அருளம்பலவனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: அ.சிவானந்தநாதன், காரைநகர், 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

(16), 480, ix பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ.

மணிவாசகர் அருளிச் செய்த திருவாசகத்திற்கு முழுமையான ஆராய்ச்சி உரையை அருளம்பலவனார் எழுதிமுடித்து அச்சிடும் வேளையில் உயிர்நீத்துவிட்டார். அவரது மைந்தன் அ.சிவானந்தநாதன் பின்னாளில் அந்நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். முதற்பகுதியான இந்நூலில் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம் ஆகிய பக்தி இலக்கியங்களுக்கான ‘சங்கநூற்செல்வர்’; பண்டிதமணி சு. அருளம்பலவனாரின் உரைகள் இடம்பெறுகின்றன. பின்னிணைப்புகளாக ரோமன் இலக்கப் பக்கங்களில் பாட்டு முதற்குறிப்பகராதி, அரும்பத ஆராய்ச்சி அகராதி, மேற்கோள் நூற்பெயர்கள், பிழை திருத்தம் ஆகிய பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10697).

ஏனைய பதிவுகள்

14628 நுங்கு விழிகள் (கவிதைகள்).

இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மேதினிகா வெளியீடு, 34/3, செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, மே 2007. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). (12), 39 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

12688 – இசைத்தமிழ்ச் சிந்தனைகள்: தமிழரின் இசை மரபு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு.

கௌசல்யா சுப்பிரமணியன். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன்புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன்புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxxii, 297 பக்கம், விலை: