சு.அருளம்பலவனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி வி.அருளம்பலம், காரைநகர், 1வது பதிப்பு, 1973. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).
xviiiஇ 481-1402 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
மணிவாசகர் அருளிச் செய்த திருவாசகத்திற்கு அருளம்பலவனார் எழுதிய முழுமையான ஆராய்ச்சி உரையின் இரண்டாம் பாகம் இதுவாகும். அருளுரை, அணிந்துரை, பாராட்டுரை, மதிப்புரை, பதிப்புரை, மேற்கோள் நூற்பெயர்கள், திருப்பதிகப் பெயரட்டவணை, திருவாசக ஆராய்ச்சியுரை, பாட்டு முதற்குறிப்பு அகராதி, அரும்பத முதலியவற்றின் ஆராய்ச்சி அகராதி, பிழை திருத்தம் ஆகிய 11 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1057).