தமிழவேள் க.இ.கந்தசாமி (உரையாசிரியர்). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
50 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 21×13.5 சமீ.
திருவெம்பாவையும் திருவம்மானையும் எட்டாம் திருமுறையான திருவாசகம் என்னும் நூலிலுள்ள இரு பகுதிகள். இதுவொரு சைவசமய நூலாயினும் சிறந்த இலக்கிய வளமுள்ள நூலாகும். புறத்திணை அகத்திணைப் பொருள் மரபுகளும், சொல்-பொருள் நயங்களும், பாவகைகளும் இந்நூலின் இலக்கிய வளத்தினை உணர்த்துவன. பண்டைத் தமிழரின் கடவுட்கொள்கை, பண்பாடு, வரலாறு, நாடுகள், ஊர்கள், சொல்வழக்குகள் பாவகைகள் ஆகியவற்றை இந்நூல் அறிவுறுத்துகின்றது. திருவெம்பாவையும் திருவம்மானையும் பற்றிய விரிவான விளக்கத்தைத் தரும் தமிழவேளின் இந்நூல், அவை பற்றிய அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளையும், பாடங்களுக்கு உரிய பதவுரை, விசேட உரைகளையும், இலக்கணக் குறிப்புகளையும் சொல்-பொருள் நயங்களையும் உள்ளடக்கியது. திருவாசக நூற்சிறப்பு, திருவெம்பாவை பற்றிய விளக்கம், திருவெம்பாவை உணர்த்தும் இறைவன் இயல்புகள், திருவெம்பாவை மூலமும் உரையும், திருவம்மானை பற்றிய விளக்கம், திருவம்மானை மூலமும் உரையும், திருவம்மானை உணர்த்தும் இறைவன் இயல்புகள் ஆகிய அத்தியாயங்களுடன் மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி வினாக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2445).