மு.க.சிவபாதவிருதயர். வவுனியா: பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையம், சாந்தம், பிரசாந்தி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).
(4), 181 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5 சமீ.
சாயிபக்தரான அமரர் மு.க.சிவபாதவிருதயர் (15.8.1945-19.10.2007) அவர்களின் சிவபதப்பேற்றையொட்டி அவரது நினைவாக 3.11.2007அன்று வெளியிடப்பட்ட அவரது தொகுப்புக்கள் அடங்கிய நூல் இதுவாகும். இவர் இலங்கை மக்கள் வங்கியின் வடவலயத்தின் ஓய்வுபெற்ற உதவிப்பொது முகாமையாளராகப் பணியாற்றியவர். திரு.மு.க.சிவபாதவிருதயர். ஒரு நல்ல பக்தன். தனது தொழிலையும் சிறப்பாகச் செய்து ஓய்வு நேரம் முழுவதையும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் போதனைகளை சத்யசாயி நிறுவனத்தில் உள்ள அங்கத்தவர்களுக்கும் மற்றவர் களுக்கும் விளக்க வேண்டும் என்ற பேரவாவின் காரணமாக பல நூல்களை வெளியிட்டிருக்கின்றார். அந்த வரிசையில் ‘தெய்வீகம் மலரும் பொழுது’ என்ற ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டும் நூல் வெளியாகியுள்ளது. பகவானின் போதனைகளை ஒரு தொடராகத் தொகுத்து ஆத்மீக சாதகர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தக்கூடிய முறையில் இதனை வெளியிட்டிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50851).