12177 – முருகன் பாடல்: பதினொன்றாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

(7), பக்கம் 4036-4444, தகடுகள், விலை: ஆறு பகுதிகளும் ரூபா 2700., அளவு: 22×14 சமீ.

இந்நூல், இரண்டு தொகுதிகளில் தொகுதிக்கு ஆறு பகுதிகளாக, 12 பகுதிகளில் (தனித்தனி நூல்களாக) வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பின் பொருளடக்கம் முழுமையும் எல்லாப் பகுதிகளிலும் முன்பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. பாட்டு முதற்குறிப்பு அகராதி, பாட்டுடைக் கோவில் அகராதி, பாட்டுத் தலைப்பு அகராதி, ஆசிரியர் அகராதி என்பன இத்தொகுதியின் இறுதிப் பகுதிகளாக உள்ளன. பதினொராம் தொகுதியில் குறுக்குத்துறை குமரன் பிள்ளைத் தமிழ், சென்னை மாநகர்க் கந்தசாமி பிள்ளைத் தமிழ், சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், தரங்கை வீரவேலாயுதசாமி பிள்ளைத் தமிழ், திருவருணைமுருகன் பிள்ளைத் தமிழ், தேவகோட்டை முருகன் பிள்ளைத் தமிழ், சிதம்பரம் ஸ்ரீ பாண்டிநாயகன் என்ற முருகப் பெருமான் பிள்ளைத் தமிழ், மண்டூர்ப் பிள்ளைத் தமிழ் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57676).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe Aufführen

Content An irgendeinem ort Konnte Man Book Of Ra Aufführen? Funktionen: Für jedes Beste Book Of Ra Gewinne Losgelöst Mejores Casinos Que Ofrecen Novomatic Juegos: