முஹம்மது ஸெயின். கொழும்பு 14: ஸெயின்ஸ்தான் டிரேடிங் கம்பெனி லிமிட்டெட், 703, சிரிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, 1977. (கொழும்பு 3: த டயமண்ட் பிரின்டர்ஸ், 41, சென் மைக்கல் வீதி).
(4), 60 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 16×12 சமீ.
H.G.வெல்ஸ் (H. G. Wells, 21.09.1866-13.08.1946) ஒரு ஆங்கில எழுத்தாளர். புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பல்வகைப்பட்ட துறைகளில் எழுதிவந்தவர். அதில் ‘தி டைம் மெஷீன்’ என்ற புதினம் காலப் பயணத்தில் சென்று வருவது பற்றி எழுதப்பட்டது. இந்த நாவல் அறிவியல் விந்தையாக அவரது காலத்தில் இருந்து இன்றுவரை பலரும் வியக்கும் விதத்தில் அமைந்துள்ளது. வெல்ஸ் எழுதிய மதம் சார்ந்த நூல்களுள் விமர்சனத்துக்குள்ளாகிய நூல் ‘கடவுள் கண்ணுக்கு தெரியாத அரசன்’ (GOD THE INVISIBLE KING) என்பதாகும். 1917ஆம் ஆண்டு இந்த நூலை இவர் எழுதினர். இவருக்கு கடவுள் பற்றி எப்படி தெரியும் என்றும், எந்தக் கடவுளைப் பின்பற்றி இந்தப் புத்தகத்தை எழுதினர் என்றும் பல கேள்விகள் இதைப் படித்தவர்களுக்கு எழுந்தது. அதில் அவர் தனிப்பட்ட மற்றும் ஆத்மார்த்தமான கடவுள் பற்றிய கருத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நூலில் மதம் பற்றிய தெளிவான கருத்தாடல், குறிப்பாக இஸ்லாமிய மதத்தவரை எதிர்ப்புக்குரல் எழுப்ப வைத்தது. H.G.வெல்ஸ் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் மறுப்புக் கட்டுரையொன்றினை இங்கிலாந்தில் வெளியாகிவந்த ஐளடயஅiஉ சுநஎநைற என்ற சஞ்சிகை 1948இல் வெளியிட்டிருந்தது. இக்கட்டுரையை அடிப்படையாக வைத்து தமிழகத்திலிருந்து வெளிவரும் ‘தாருல் இஸ்லாம்’ என்ற தமிழ்ச் சஞ்சிகை பின்னாளில் வெளியிட்ட கட்டுரையின் நூலுருவே இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2979).