சிறி ஹெட்டிகே (ஆங்கில மூலம்), சோ. சந்திரசேகரன், மா.கருணாநிதி (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 312 பக்கம், விலை: ரூபா 900., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659- 550-5.
பேராசிரியர் சிறிபால ஹெட்டிகே கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் மூத்த பேராசிரியராகவும் பொலீஸ் ஆணைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் எழுதிய வுழறயசனள ய ளுயநெ ளுழஉநைவல என்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். சிறி ஹெட்டிகே ஏப்ரல் 2013 முதல் 2014 வரையிலான காலப்பகுதிகளில் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பே இதுவாகும். உலகளாவிய சூழலமைப்பு (6 கட்டுரைகள்), அபிவிருத்தி (9 கட்டுரைகள்), ஆளுகை (11 கட்டுரைகள்), சமூக நலனளிப்பு (9 கட்டுரைகள்), இனத்துவ சமய மோதல்கள் (9 கட்டுரைகள்), இளைஞர் (2 கட்டுரைகள்), கல்வி (7 கட்டுரைகள்), சுகாதாரம் (5 கட்டுரைகள்), சுற்றாடல் (5 கட்டுரைகள்), போக்குவரத்து (3 கட்டுரைகள்) ஆகிய பத்துத் தலைப்புகளில் 66 கட்டுரைகள் வகுத்துத் தரப்பட்டுள்ளன.