மித்தா வீரக்கொடி (மூலம்), M.H.M.யாக்கூத் (தமிழாக்கம்). மகரகம: சனத்தொகையும் குடும்பநலக் கல்வியும் செயற்றிட்டம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1996. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்).
iv, 154 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் அநுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகையும் குடும்பநலக் கல்வியும் செயற்றிட்டம் தொடர்பான நூல் இதுவாகும். இளைய வயதினரின் நடத்தைகளை சீராக வழிநடத்திக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. பிள்ளைகளின் வளர்ச்சி, பாலியல் கல்வி ஆகியன பற்றி இங்கு பேசப்படுகின்றது. நடத்தை உருவாக்கத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை பொருத்தமான பாத்திர வார்ப்புக்களினூடாக விளக்கச் சித்திரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31788).