12200 – யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல்: அதன் உருவாக்கம், இயல்பு, அசைவியக்கம் பற்றிய ஒரு பிராரம்ப உசாவல்.

கார்த்திகேசு சிவத்தம்பி. கொழும்பு 5: தர்சனா பிரசுரம், 81, ஹவ்லொக் வீதி, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

36 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20×14.5 சமீ.

1992 ஜூன் 2 அன்று காலஞ்சென்ற பேராசிரியர் சோ.செல்வநாயகம் அவர்களின் நினைவுதினப் பேருரையாக ஆற்றப்பட்ட உரையின் திருத்திய வடிவம் இதுவாகும். இச்சிறு ஆய்வு, (i). யாழ்ப்பாணத்தின் சமூகத்தை இனங்கண்டுகொள்ளல், (ii). யாழ்ப்பாணச் சமூகத்தின் உருவாக்கம், நிலைபேறு, தொடர்ச்சியின் சின்னமாகத் தேசவழமைச் சட்டம் அமையுமாறு, (iii). யாழ்ப்பாணச் சமூகத்தின் இயல்புகள் சிலவற்றினை நோக்கல், (iv). இச்சமூகத்தின் பண்பாடும் கருத்து நிலையும். (v). இச்சமூகத்தின் சமகால அசைவியக்கத்தின் தன்மைகள் சில. (vi). நிறைவுரை ஆகிய ஆறு உப தலைப்புகளில் விரிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21432. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004688).

ஏனைய பதிவுகள்