ஹயசிந்த் தஹநாயக்க, எம்.சீ. த சில்வா, பத்மினீ என்.பெரேரா, ரஞ்சினி சேனாநாயக்க (பதிப்பாசிரியர்கள்), எம்.எம்.றாசீக், திருமதி பீ.சிவகுமாரன், எம்.எச்.எம்.ஹசன் (தமிழாக்கம்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 6வது பதிப்பு, 1992, 1வது பதிப்பு, 1986. (அம்பலாங்கொடை: மஹிந்த பிரின்டர்ஸ், இல. 341 அல்பிட்டிய வீதி, வத்துகெதர).
vii, 147 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
பத்தாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டத்துக்கமைய எழுதப்பட்ட சமூகக் கல்வி சார்ந்த நூல். உலகின் பௌதிகச் சூழல், காலநிலை மூலகங்களும் காலநிலையைக் கட்டுப்படுத்தும் காரணிகளும், காலநிலை வகைகளும் இயற்கைத் தாவரங்களும், கனிய வளம், தொழினுட்பமும் விவசாயமும், தொழினுட்பமும் கைத்தொழிலும், மனித செயற்பாடுகளும் உலகின் பல்வேறு பிரதேசங்களும், சர்வதேச வியாபாரம், உலக நாடுகள் ஒன்றிலொன்று தங்கியிருத்தல், ஆட்சி முறைகள், உலக உணவுப் பிரச்சினை, உலக சனத்தொகைப் பிரச்சினை, உலகின் சத்தி நெருக்கடி, சூழல் மாசுபடுதல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய பாடப்பரப்புகளை இந்நூலின் 15 இயல்களும் தனித்தனியாக விபரிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17691).