12207 – நித்திய கல்யாணி: இளவாலை இந்து இளைஞர் சனசமூக நிலைய பொன்விழா மலர் 1952-2002.

மலர்க்குழு. இளவாலை: இந்து இளைஞர் சனசமூக நிலையம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxiv, 77 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.

வாழ்த்துரைகள், அறிக்கைகள், மன்ற நிகழ்வுப் புகைப்படங்கள் ஆகியவற்றுடன், நுண்மதி பாலர் பாடசாலை (சரஸ்வதி ஆறுமுகம்), முன்பள்ளியின் முக்கியத்துவம் (ச.நிர்மலநாயகி), ஒல்லுடை அறநெறிப் பாடசாலை (இராசேந்திரம் இசைச்செல்வி), மாதர் அபிவிருத்தி நிலையப் பயிற்சி நெறி (இராசேந்திரம் திருச்செல்வி), சமூக மட்ட நிறுவனங்களில் இளைஞர்களின் பங்கை மேம்படுத்துதல் (நாகலிங்கம் மகேந்திரன்), சனசமூக நிலைய பொது நூலக முகாமைத்துவத்தில் நவீன அபிவிருத்திப் பிரயோகங்கள் (பாலசுப்பிரமணியம் தனபாலன்), மக்கள் பங்களிப்புடன் செயற்றிட்டங்களை இனங்காணலும் அமுல்நடத்தலும் (ஐ. சிவலோகநாதன்), சமூக மேம்பாட்டிற்கு சனசமூக நிலையத்தின் பங்களிப்பு (குணரட்னம் கஜரூபனா), அம்மையார் செய்த புரட்சி (த.தயானந்தன்), அம்மையார் செய்த புரட்சி (த.தயானந்தன்), மயிலங்கூடலில் சைவச்சான்றோர் சங்கமம் (சி. அப்புத்துரை), உங்களுக்குத் தெரியுமா? மலரும் நிறமும் (சுகந்தா கிருபானந்தராசா), கண்டதும் கேட்டதும் (செ.பாலச்சந்திரன்), Communication (Prabashini Balasingam), இளவாலைச் சைவாலயங்கள் (யோகநாயகி சண்முகநாதன்), சமயமும் கல்வியும் (செல்லத்துரை ஈஸ்வரன்), புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு (க.அருந்தவராஜா), ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே (சுந்தரலிங்கம் கிஷோகுமார்), கல்வியினூ டாக விருத்தி செய்யப்பட வேண்டுவன (சுகந்தா கிருபானந்தராசா), கல்வியின் முக்கியத்துவம் (சுப்பிரமணியம் கந்ததர்சினி), சைவத்தமிழ்ப் பண்பு (செல்லத்துரை மாவிரதன்), எண்கோலம் (சுகந்தா கிருபானந்தராசா), ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் ஒரு பார்வை (மா.அருள்சந்திரன்) ஆகிய படைப்பாக்கங்களும்,முத்து விஜயராகவன், செல்லத்துரை நாவரசன், பாரதிதாசன், திருநாவுக்கரசு பகீரதி, சண்முகலிங்கம் முகுந்தன், தே.விக்கினேஸ்வரன் ஆகியோரின் கவியாக்கங்களும் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33035. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008683).

ஏனைய பதிவுகள்

14298 மேல் நீரேந்துப் பரப்பு முகாமைத்துவ திட்டத்திற்கான பண்ணை மண் பாதுகாப்பு சிபார்சுகள்: பாதுகாப்பு முறைகளும் நியமங்களும்.

எச்.பி.நாயக்ககோராள (மூலம்), சீரங்கன் பெரியசாமி (தமிழாக்கம்). கொழும்பு: மேல் நீரேந்துப் பரப்பு முகாமைத்துவத் திட்டம், சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சு, 30, லக்சபான மாவத்தை, ஜயந்திபுர, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை.

12066 – சைவ நெறி: ஒன்பதாம் வகுப்பு.

பதிப்புக்குழு. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 7வது பதிப்பு, 1988, 1வது பதிப்பு, 1980, 2வது பதிப்பு, 1982, 3வது பதிப்பு, 1983, 4வது திருத்திய பதிப்பு, 1985, 5வது