க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
v, 120 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISSN: 1391-7269.
பிரவாதம் ஆறாவது இதழின் கட்டுரைகளாக ‘ஆராய்ச்சி முறையியல்’ (ஜெயதேவ உயன்கொட), ‘சமூக விஞ்ஞான ஆராய்ச்சி முறையியல்: நேர்க்காட்சிவாதமும், மக்ஸ்வெபரின் விளக்கமுறைச் சமூகவியலும்’ (க.சண்முகலிங்கம்), ‘விஞ்ஞானத்தின் மெய்யியல்: கால் பொப்பரும் தோமஸ் கூனும்’ (சோ.கிருஷ்ணராஜா), ‘பூர்வகாலத் தமிழ்நாட்டில் அரசமைப்பு உருவாக்கம்’ (கா.சிவத்தம்பி), ‘உயிர்ப்பு நிலை: பேராசிரியர் சிவத்தம்பி கண்டறிந்த தமிழ்க் கல்வி’ (வீ.அரசு), ‘நூல் அறிமுகம் Writing Research Proposals in the Social Sciences and Humanities’, ‘அஞ்சலி -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி’ ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் குழுவில் எம்.ஏ.நு‡மான், செல்வி திருச்சந்திரன், என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51630).