12743 – தமிழ் இலக்கியம் வினா-விடை: ஆண்டு 10-11.


க.சொக்கலிங்கம் (புனைபெயர்: சொக்கன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 8வது பதிப்பு, ஜுலை 1995. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63
B.A. தம்பி ஒழுங்கை).

(44), 104 பக்கம், விலை: ரூபா 55.00, அளவு: 21 x 14 சமீ.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 10ஆம் 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கென வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியம் என்ற பாடநூலைக் கற்போருக்கு உதவுமுகமாக 150 வினா-விடைகள் கொண்டு எழுதப்பட்ட நூல் இது. செய்யுள், வசனம் என்ற இரு பகுப்புகளுக்குள் காலத்தாலும் சூழ்நிலையாலும் வெவ்வேறான பாடற் பகுதிகளும், வெவ்வேறான நடைகொண்ட உரைப் பகுதிகளும் (கட்டுரைகளும்) இந்நூலிலே அடங்கியுள்ளன. இலக்கிய நயம், பொருள்விளக்கம், சொற்களஞ்சியத் தேட்டம் அறிவு விருத்தி ஆகிய நோக்கங்களை நிறைவுசெய்யும் வகையில் இந்நூலின் பாடல்களும் கட்டுரைகளும் கற்கவும் கற்பிக்கவும் வேண்டியனவாயுள்ளன. மொழியறிவு விருத்திக்கு இலக்கண அறிவின் அடிப்படைத் தேவையும் உணரப்பட்டுள்ளமையால், இந்நூலின் விளக்கக் குறிப்புகளிலே ஆங்காங்கு இலக்கண விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38601).

ஏனைய பதிவுகள்

Online Ports

Posts Information And you can Gaming Resources – visit site Added bonus Video game Should Learn more about Slots? The convenience and you may access