12751 – அலையருவி சிறப்பு மலர் 1995.

தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 1995. (வத்தளை: வத்தளை அச்சகம், 17/10, நீர்கொழும்பு வீதி).

(82) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 19.5 சமீ.


வடமேல் பிரதேச மாணவர்களுக்காகக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் 1994ஆம் ஆண்டு ஒழுங்குசெய்திருந்த தமிழ்த் திறன் தேர்வுகளின் பதிவாக வெளிவந்துள்ள சிறப்பு மலர் இது. கடவுள் வாழ்த்து, தமிழ் மொழி வாழ்த்து, தமிழவேள் க.இ.க. கந்தசுவாமியின் முன்னுரை, மற்றும் ஏ.ஜே.எம். ஜலீல், வீ. நடராசா, செ.குணரெத்தினம், எம்.பி. நடேசன், என்.டி. பீரிஸ் ஆகியோர் வழங்கிய வாழ்த்துச் செய்திகள் முன்னதாக இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து இம்மலரில் சிறப்புக் கட்டுரைகளாக வடமேற்கு பிரதேசத்தின் வரலாற்றாய்வு (ஏ.என்.எம். ஷாஜகான்), வடமேல் பிரதேசத்து தமிழ் ஊர்கள் (உடப்பூர் வீரசொக்கன்), வடமேல் பிரதேசப் பெரியார் திரு.சைமன் காசிச்செட்டி (கார்த்திகா சுப்பிரமணியம்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து செல்வி எல்.பிரசீலா, செல்வி ஆர். சர்புன்னிசா, வை.உதயகுமார், ரா.நித்திய கல்யாணி, கார்த்திகா சுப்பிரமணியம், ஆர்.மேரி றெடிஸ்ரா, கே.நிரஞ்சன், ஜ.நிஸாஹிறா, கா.திலகேஸ்வரன், எஸ்.பிரதீபன்,சி.டெலியா டீ. றொபின்ஸ், வே.துஷ்யந்தி, சி.விநாயகமூர்த்தி, செல்வி வி.மனோரஞ்சிதம் ஆகியோரின் கட்டுரைகளும், எம்.எப்.றின்சாட் அகமட், கை.கஜந்தன், கை.அரவிந்தன், மு. கௌரிகாந்தன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இறுதியாக கொழும்புத் தமிழ்ச்சங்கப் பணிகள் பற்றித் தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி அவர்களது அறிக்கையும் நன்றியுரையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39201. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின்
சேர்க்கை இலக்கம் 009529).

ஏனைய பதிவுகள்