திருமலை நவம், அருள் சுப்பிரமணியம்,பால சுகுமார் (மலர்க் குழுவினர்). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, நவம்பர் (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்).
(4), 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5 x 19 சமீ.
வடக்கு-கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு 30.11.1991 அன்று நடத்திய இலக்கிய விழாவின் சிறப்பிதழ். வாழ்த்துச் செய்திகளுடன் தொடங்கும் இம்மலரில் வடக்கு-கிழக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு நடாத்தும் இலக்கிய விழா 1991, இலக்கியப் பரிசில் பெறும் நூல்கள் 1988-1989, சாகித்தியமண்டலப் பரிசுத்திட்டத்திற்கான இலக்கியங்கள், இலக்கிய விழா தொடர்பாக… (எஸ். எதிர்மன்னசிங்கம்), திறன் ஆய்வு உமா வரதராஜனின் ‘உள்மன யாத்திரை” (கே.எஸ்.சிவகுமாரன்), மதிப்பீட்டுரை: ‘திருக்கேதீச்சர மான்மியம்” (வித்துவான் சா.இ.கமலநாதன்), ஒரு நோக்கு: கவிஞர் சோலைக்கிளியின் ‘எட்டாவது நரகம்” (இணுவையூர் தம்பு-சிவா), ஆக்க இலக்கியம், ஒரு கண்ணோட்டம்: ‘இலங்கையிற் தொல்லியலாய்வும் திராவிடக் கலாசாரமும்” (செ.அழகரெத்தினம்), நாடக இலக்கிய மதிப்பீடு: அராலியூர் ந.சுந்தரம்பிள்ளையின் ‘முதலாம்பிள்ளை”, நவீன
விமர்சன இலக்கியத்தின் முன்னோடி பேராசிரியர் கைலாசபதி (பாலசிங்கம் சுகுமார்), திருக்கோணமலையின் கலை இலக்கியம் பற்றிய ஓர் கண்ணோட்டம் (திருமலை நவம்), பாரதியை தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்த சுவாமி விபுலானந்தர் (நா.புவனேந்திரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28288. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 001440).