12755 – இலங்கைக் கலாசாரப் பேரவையின் தமிழ் இலக்கிய விழா மலர்-1972.

என். சோமகாந்தன் (பொறுப்பாசிரியர்). கொழும்பு 3: தமிழ் இலக்கியஆலோசனைக்
குழு, இலங்கை கலாசாரப் பேரவை, 135 தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1972. (கொழும்பு 13: ரஞ்சனா பிரின்டர்ஸ், 98, விவேகானந்தா மேடு).

(104) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23 x 18 சமீ.


விழாச் செயற்குழுவின் தலைவராக பேரா.கா.சிவத்தம்பியும், செயலாளராக டொமினிக் ஜீவாவும், உறுப்பினர்களாக ஆர்.பேரம்பலம், என்.சோமகாந்தன், ஆ.தேவராசன், நா.சண்முகநாதன் ஆகியோரும் இணைந்து செயற்பட்டிருந்தனர். இலங்கை கலாசாரப் பேரவையும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் – தமிழ் இலக்கிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை (கார்த்திகேசு சிவத்தம்பி), ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி (அம்பலத்தான்), கலாசாரப் பேரவையின் பணியே வாழ்ககவிதை (இ.சிவானந்தன்), ஒரு கால் நூற்றாண்டுக் கவிதை வரலாற்றில் தென்னகமும் ஈழமும் (கவிஞர் இ.முருகையன்), ஈழத்தின் முஸ்லிம் புலவர்கள் (எம்.எம்.உவைஸ்), ஈழத்தில் தமிழிலக்கியத் திறனாய்வு முயற்சிகள் (க.கைலாசபதி), சமய வீரரிலிருந்து தேசிய வீரர் வரை: நாவலரியக்கத்தின் படிமுறை வளர்ச்சி-(நா. சோமகாந்தன்), விடிவை நோக்கி-கவிதை (சில்லையூர் செல்வராசன்), தத்தை விடுதூது (பொ.பூலோகசிங்கம்), தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பண்டைய
இலக்கியத்தின் தாக்கமும் தொடர்ச்சியும்-(கார்த்திகேசு சிவத்தம்பி), எங்கள் நாடு-கவிதை (நவாலியூர் சோமசுந்தரப் புலவர்), ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை வளர்ச்சியும் பிரச்சினைகளும், தீர்வு மார்க்கங்களும்- பிரேம்ஜி ஞானசுந்தரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. விழாவில் பாராட்டப்பட்ட தமிழறிஞர்களின் விபரக்குறிப்பும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத்தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18972. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004081).

ஏனைய பதிவுகள்

casino online

Free online casino Online casino bonus Casino online “As someone who enjoys Asian-themed slots, I appreciate how Sakura Fortune thoughtfully celebrates Japanese culture without falling