12766 – மட்டக்களப்புப் பிரதேசச் சாகித்திய விழா நினைவு மலர் 1993.

சா.இ.கமலநாதன் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்புப் பிரதேசச் சாகித்திய விழா அமைப்புக் குழு, 1வது பதிப்பு, ஆவணி 1993. (மட்டக்களப்பு: வளர்மதி அச்சகம்).

(14), 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 19 சமீ.

மட்டக்களப்பில் 1993 ஆவணி 9ம், 10ஆம் திகதிகளில் நடைபெற்ற பிரதேச சாகித்திய விழாவின் நினைவுச் சின்னமாக இம்மலர் வெளிவந்துள்ளது. பாரத அம்மானை, 16ஆம் நூற்றாண்டு மட்டக்களப்பு, அரங்கநாயகி, மட்டக்களப்புத் தமிழும் மலையாளமும், மட்டக்களப்பின் நாடக அரங்கம், கூரைமுடிப் பாரம்பரியம் முக்குகர் வரலாறு எனப் பல்வேறு விடயங்களை ஆய்வுக்குட்படுத்தி இம்மலரில் கட்டுரைகளும் சில கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25175).

ஏனைய பதிவுகள்

12848 – யோகிஸ்ரீ சுத்தானந்த பாரதியாரின் பாரத சக்தி மகா காவியத்தில் ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்.

ஈழத்துப் பூராடனார். கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2007. (கனடா: ரீ கொப்பி). xxiv, 2081+4 பக்கம், விலை: கனேடிய

14028 அறநெறிச் செல்வம்.

நினைவு மலர்க் குழு. யாழ்ப்பாணம்: தெய்வானை அம்மையார் நினைவு வெளியீடு, சுருவில், 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (12), 131 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: