சாரல்நாடன் (இதழாசிரியர்). கண்டி: மத்திய மாகாண கல்வி (தமிழ்) கைத்தொழில் கால்நடை அபிவிருத்தி உணவு வர்த்தகம் வாணிப சுற்றுலாத்துறை இந்துக் கலாசார அமைச்சு, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
(12), 13-98 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 19 சமீ.
மத்திய மாகாண கல்வி (தமிழ்) கைத்தொழில் கால்நடை அபிவிருத்தி உணவு வர்த்தகம் வாணிப சுற்றுலாத்துறை இந்துக் கலாசார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்படும் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலையகப் பிரதேசத்தில் எழுச்சியுடன் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதுண்டு. அவ்வகையில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வினையொட்டி வெளியிடப்பெற்ற இம்மலரில் மலையக மக்களின் அடையாளங்கள் (மா.செ.மூக்கையா), இருபதாம் நூற்றாண்டில் மலையக மக்கள் (சோ.சந்திரசேகரன்), பெருந்தோட்ட மக்களும் சமூக நலன் சேவைகளும் (மு.சின்னத்தம்பி), பெருந்தோட்டப் பெண்கள் (லலிதா நடராஜா), தோட்ட லயங்களும் கொற்றேஜ் வீடுகளும் (நா.வேல்முருகு), இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழரின் அரசியல் எதிர்காலம் (அம்பலவாணர் சிவராஜா), மலையகக் கல்வி (தை.தனராஜ்), மலையகமும் ஆசிரியர் கல்வியும் (எஸ்.முரளீதரன்) ஆகிய எட்டு படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39878).