12769 – மலையருவி: சிறப்புமலர்.

தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி (இதழாசிரியர்). கொழும்பு 6: இலக்கியக்குழு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1994. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17ஃ10, நீர்கொழும்பு வீதி).

106 பக்கம், அட்டவணை, புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 18.5 சமீ.

மலையக மாணவர்களுக்காக 1993ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட நாவன்மை, மொழித்திறன் கட்டுரைகள், கவிதைகள் எழுதும் தமிழ்த்திறன் தேர்வுகள் தொடர்பான சிறப்பு மலர் இதுவாகும். இதில் முன்னுரை, கொழும்பு தமிழ்ச் சங்க வரலாறும் பணிகளும், சிறப்புச் செய்திகள், மாணவர் நல்லுரைகள், மாணவர் எழுத்துரைகள், மாணவர் கருத்துரைகள், மாணவர் பாமலர்கள், மாணவர் சிந்தனையுரைகள், மலையக மாணவர் தமிழ்த்திறன் தேர்வுப் பெறுபேறுகள், மலையக மாணவர் தமிழ்த் தேர்வுகளில் பரிசில் பெற்றவர் குறிப்புகள், மலையக மாணவர் தமிழ்த் தேர்வுகளும் விதிகளும், மலையக மாணவர் தமிழ்த்திறன் தேர்வுகள் அட்டவணை, நிகழ்ச்சி நிரல், நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள் ஆகிய 15 தலைப்புகளில் இம்மலர் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28208).

ஏனைய பதிவுகள்

14945 நாடகக் கலைஞர் ஏ.ரி.பொன்னுத்துரை: வெள்ளிவிழா மலர்-1974.

சி.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1974. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). ஒஒiஎ, 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. பதிப்புரை (பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை),

Kasyno Slot wild games Przez internet

Content Na , którzy Musisz Zwrócić uwagę, Wybierając Premia Kasynowy? Atrakcyjne Uciechy Przy Kasyno Holandia Lokalne Kasyna Przez internet : Najpopularniejsze Procedury Płatności Lub Można

14083 சைவ இலக்கியக் கதாமஞ்சரி.

கா.அருணாசல ஆசிரியர். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1959. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்). xiv, 254 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×12 சமீ. மட்டக்களப்பு, சைவப்புலவர், தேசிகமணி கா.அருணாசல ஆசிரியர்