12773 – ஆரண்ய வாசம்: கவிதைத் தொகுப்பு.

பாகீரதி கணேசதுரை (புனைபெயர்: மாவை பாரதி). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2016. (சுன்னாகம்: கிருஷ்ணா பிரின்டர்ஸ், வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் வீதி).

xiv, 102 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5 x 15 சமீ., ISBN: 978- 955-43956-0-2. 72.

கவிதைகளைக் கொண்ட இக்கவிதைத் தொகுதி இளையோருடன், இறை யோருடன், உலகோருடன், உணர்வோருடன் ஆகிய நாலு பிரிவுகளின்கீழ் 894.8(1) தமிழ்க் கவிதைகள் நூல் தேட்டம் – தொகுதி 13 433 பிரித்துத் தரப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கேற்ற 29 கவிதைகளை ‘இளையோருடன்’ என்ற முதலாவது பிரிவு உள்ளடக்குகின்றது. ‘இறையோருடன்’ என்ற இரண்டாம் பிரிவில் 16 பக்திப் பாமாலைகள் இடம்கொண்டுள்ளன. ‘உலகோருடன்’ என்ற மூன்றாவது பிரிவில் ஆச்சார்ய தேவோபவ, சரண் புகுந்தாள், சரணாலயம், ஐந்திணை ஒழுக்கம், பொலியோ பொலி, விண்ணப்பம், அலைகளின் மேலே, மகாஜனத் தாய், நூற்றாண்டும் கடந்த அன்னை, பாராட்டும் தாயானவள், ஞானசாரதி, வளர்க சிங்கபுரி ஆகிய பன்னிரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘உணர்வோருடன்’ என்ற நான்காவது பிரிவில் பிரபஞ்ச கீதம், பலர் நடந்த பாதை, மலைத்தேன், இதயமற்ற இரவுகள், கற்களும் பூக்களாகும் என இன்னோரன்ன 17 உணர்வுக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

9863 மருந்தற்ற வாழ்வு.

தொகுப்பாளர்கள். தெல்லிப்பளை: பசுபதி இராசதுரை குடும்பத்தினர், தெல்லிப்பளை கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 6: விகடன் பதிப்பகம், 541/2 காலி வீதி). (6), 56பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14

15552 தேயிலைப் புஷ்பங்கள்: 1979 முதல் 2018 வரை மலர்ந்தவை.

கோவுஸ்ஸ கே.ராம்ஜி உலகநாதன். சாய்ந்தமருது-14: தடாகம் கலை இலக்கிய வட்டம், 677, அஹமட் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (கொழும்பு 13: எஸ்.ஆர்.எஸ். அச்சகம்). xvi, 74 பக்கம், விலை: ரூபா 250.,