12781 – சிறைக் குறிப்புகள்.

ஹோ சி மின் (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). தலாத்து ஓயா: கே.கணேஷ், கரந்தகொல்லை எஸ்டேட், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1973. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு).

84 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 17.5 x 12 சமீ.

வியட்நாமின் தந்தை என வர்ணிக்கப்படும் தோழர் ஹோசிமின் தனது நாட்டை ஆக்கிரமித்த பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தையும், பின்னர் அமெரிக்க ஏகாதி பத்தியத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு தனது நாட்டு மக்களுக்குத் தலைமைதாங்கி இன்றைய சுதந்திர சோசலிச வியட்நாமுக்கு வித்திட்டவர். ஹோசிமின் தலைமையில் தளபதி ஜியாட்பின் நெறிப்படுத்தலில் வியட்நாம் மக்கள் வீரமும், நியாயமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தி 1975 இல் சுதந்திர வியட்நாமை உருவாக்கினர். உலகின் அசைக்க முடியாத வல்லரசு எனக் கருதப்பட்ட அமெரிக்கா படுதோல்வியை வியட்நாம் மக்களிடம் சந்தித்தது. ஹோசிமின் சீனாவின் பிற்போக்கு கோமின்டாங் ஆட்சியாளர்களினால் சில காலம் சிறை வைக்கப்பட்டவர். சிறந்த கவிஞரான அவர், சீனச் சிறையில் இருந்து கொண்டு எழுதிய கவிதைகள் ஹோசிமின் சிறைக் குறிப்புகள் என்ற பெயரில் நூலாக வந்து வியட்நாமிய மக்களின் போராட்ட உணர்வுகளுக்கு பெரும் 894.8(1) தமிழ்க் கவிதைகள் ஃ 894.8(11) மொழிபெயர்ப்புக் கவிதைகள் நூல் தேட்டம் – தொகுதி 13 437 உத்வேகத்தைக் கொடுத்தது. ஹோசிமின் கவிதைகள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க ஸ்தாபகர்களில் ஒருவரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கண்டி தலாத்து ஓயாவைச் சேர்ந்த தோழர் கே.கணேஷ் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18939).

ஏனைய பதிவுகள்

1Win букмекерская контора 1Вин

Содержимое 1win сайт – Обзор букмекерской конторы и казино 1вин 1win зеркало рабочее для входа на официальный сайт 1вин 1win Зеркало Один Вин Спортивные ставки