தனிநாயக அடிகள். சென்னை 1: பாரி நிலையம், 59. பிராட்வே, 1வது பதிப்பு, மார்ச் 1966. (சென்னை 5: ஜீவன் பிரஸ்).
viii, 230 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: இந்திய ரூபா 7.00, அளவு: 21×14 சமீ.
தனிநாயக அடிகளார், முதலாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கோலாலம்பூரில் 17.4.1966 முதல் 23.4.1966 வரையிலான ஏழு நாட்கள் நடத்திய வேளையில் அதன் நினைவாக அடிகளாரின் கட்டுரைகளைத் தொகுத்து இந் நூலை வெளியிட்டுள்ளனர் பாரி நிலையத்தார். இதில் உள்ள கட்டுரைகள் காலத்திற்கேற்ப வேறுபடும் மனித குலத்தின் எண்ணங்களையும் பழக்க வழக்கங்களையும் சமூகப் பண்பாடுகளையும் விளக்குவதுடன் உலக ஒருமைப் பாட்டையும் தெளிவாக விளக்குகின்றன. சுற்றுச் செலவுக் கலை, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பர்மா, இந்தோனேஷியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, தென் அமெரிக்கா, சோவியத் ஒன்றகம், இங்கிலாந்து, பிரான்சு, ஜேர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, வத்திக்கான், கிரேக்க நாடு, போர்த்துக்கல், ஐரோப்பாவின் சிறு நாடுகள், ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, நடு (மத்திய) கிழக்கு நாடுகள் ஆகிய 21 அத்தியாயங்களின்கீழ் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3996).